தெய்வ அருள் வீட்டில் தங்கும் பூஜை அறையின் அமைவிடம்

          தூணிலும், துரும்பிலும், பஞ்சிலும், பருத்தி நூலிலும் எங்கும் நீக்கமற, காற்றென கலந்திருக்கும் இறைவன் உறைய, ஓர் இடம் தேவையா வீட்டில்?…  

அண்டத்திலும் பிண்டத்திலும் இருப்பது ஒன்றே எனில் ஏன் தனி இடம் ஒதுக்க வேண்டும் இறைக்கு?

     பூஜை, புனஷ்காரம், வேதம், தூபம், தீபம், நைவேத்தியம் இவை இல்லாமல் இருக்க மாட்டாரா அந்த இறை??…

         இப்படி ஆயிரம் கேள்விகளுக்கான பதில்…..

         அழகான, அதி அற்புதமான இந்த மனித உடம்பையே உதாரணமாக கொள்வோம். வாய், வயிற்றிலும்….. மூக்கு, முதுகிலும்…… இருந்தால் என்ன ஆகும் என்பதை சிந்தித்து பார்த்தாலே நகைச்சுவையாக இருக்கும்.

          இருக்கும் இடத்தில் இருந்தால் தான் எல்லாவற்றிற்கும், எல்லோருக்கும் மதிப்பும், மரியாதையும். இடம் மாறினால் தடம் மாறிவிடும்.

           அத்தகைய வகையில், அக்னி இருக்கும் தென்கிழக்கு மூலையில் ஒளிப்பிளம்பான இறைக்கான இருப்பிடத்தை கொடுக்கும் போது, வீடும் சுபிட்சமாக இருக்கும். தெய்வ கடாட்சமும் நிரம்பி இருக்கும்.

             “சூடு” இருந்தால் தான் உயிர்கள் அனைத்தும் உயிர் வாழ முடியும். இதேபோல் “சுபிட்சம்” இருந்தால் தான் வீடே உயிர் வாழ முடியும்.

               சுபிட்சமான பூஜை அறையை எப்படி அமைக்க வேண்டும் என்பதை பற்றி அடுத்து வரும் பதிவில் காண்போம்.

               வாழ்க மகிழ்ச்சியுடன்…. வளர்க பணமுடன்…. அன்புடன்… அழகர் ஶ்ரீ வித்யா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *