தொழில் செய்யும் இடத்திற்கும் வாஸ்து தேவையா?

மனிதராய் பிறந்த அனைவரும் எப்போதும், ஏதோ ஒரு வேலையை செய்து கொண்டு தான் இருக்கின்றார்கள். செய்யும் வேலையினால் பணம் வரும் போது அவ்வேலை “தொழில்” ஆகின்றது.

விருப்பத்துடனும், முழு ஈடுபாட்டுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் ஒருவர் ஒரு வேலையை செய்யும் போது அவர் அந்த இடத்தில் தெய்வமாகின்றார். இது எல்லா இடத்திற்கும் பொருந்தும்.

கொத்தனாரின் அர்ப்பணிப்பு அழகான கட்டிடமாகிறது, ஆசிரியரின் அர்ப்பணிப்பு கற்பவரை முழுமையாக்குகிறது. குயவரின் அர்ப்பணிப்பு அம்சமான பொருளாகின்றது.

சிந்தனை தடுமாறினால் பணி சிறக்குமா? புதுமை விளையுமா? …..”விதை ஒன்று போட சுரை ஒன்றா கிடைக்கும்?”

எனில், சிந்தனை உருவாகி, செயலாகி, பணமாகும் “தொழில் செய்யும் இடம்” அளப்பரிய பிரபஞ்ச சக்தியின் அமைவிடமாய் இருப்பது அவசியம் அன்றோ?

உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களையும், விற்பனைக்கு உண்டான பொருட்களையும் ஒரே இடத்தில் வைப்பது சரியாகுமா?

மூலதனத்திற்கு தேவையான பண வசதி, தொழிலின் மூலம் கிடைக்கும் இலாபம் இவை எல்லாவற்றையும் வசப்படுத்தும் வாஸ்துவை நம் வசமாக்கிக் கொண்டால் எல்லா தொழில் செய்யும் இடமும் ஆற்றல் களமாகி பணத்தை ஈர்க்கும் காந்தமாகி விடும்.

சூட்சமங்கள் நிறைந்த இவ்வுலகில் அவற்றை அறிந்து, பயன்படுத்தி வாழும் மக்கள் இலட்சாதிபதிகளாகவும், கோடிகளில் புரளுபவர்களாகவும் இருப்பதில் ஆச்சர்யம் எதுவும் இல்லை.

எனவே தென்மேற்கு மூலைக்கு பலத்தை கொடுத்து வடமேற்கை வசப்படுத்தி தொழிலை செய்கின்ற போது சுகமான சுமையாக வாழ்க்கை மலர்வதை உணர முடியும். உணர்ந்து வாழுங்கள்!!!!

வாழ்க வளமுடன்!!! வளர்க பணமுடன்!!! அன்புடன்… அழகர் ஶ்ரீ வித்யா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *