தொழில் செய்யும் இடத்திற்கும் வாஸ்து தேவையா?

மனிதராய் பிறந்த அனைவரும் எப்போதும், ஏதோ ஒரு வேலையை செய்து கொண்டு தான் இருக்கின்றார்கள். செய்யும் வேலையினால் பணம் வரும் போது அவ்வேலை “தொழில்” ஆகின்றது.

விருப்பத்துடனும், முழு ஈடுபாட்டுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் ஒருவர் ஒரு வேலையை செய்யும் போது அவர் அந்த இடத்தில் தெய்வமாகின்றார். இது எல்லா இடத்திற்கும் பொருந்தும்.

கொத்தனாரின் அர்ப்பணிப்பு அழகான கட்டிடமாகிறது, ஆசிரியரின் அர்ப்பணிப்பு கற்பவரை முழுமையாக்குகிறது. குயவரின் அர்ப்பணிப்பு அம்சமான பொருளாகின்றது.

சிந்தனை தடுமாறினால் பணி சிறக்குமா? புதுமை விளையுமா? …..”விதை ஒன்று போட சுரை ஒன்றா கிடைக்கும்?”

எனில், சிந்தனை உருவாகி, செயலாகி, பணமாகும் “தொழில் செய்யும் இடம்” அளப்பரிய பிரபஞ்ச சக்தியின் அமைவிடமாய் இருப்பது அவசியம் அன்றோ?

உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களையும், விற்பனைக்கு உண்டான பொருட்களையும் ஒரே இடத்தில் வைப்பது சரியாகுமா?

மூலதனத்திற்கு தேவையான பண வசதி, தொழிலின் மூலம் கிடைக்கும் இலாபம் இவை எல்லாவற்றையும் வசப்படுத்தும் வாஸ்துவை நம் வசமாக்கிக் கொண்டால் எல்லா தொழில் செய்யும் இடமும் ஆற்றல் களமாகி பணத்தை ஈர்க்கும் காந்தமாகி விடும்.

சூட்சமங்கள் நிறைந்த இவ்வுலகில் அவற்றை அறிந்து, பயன்படுத்தி வாழும் மக்கள் இலட்சாதிபதிகளாகவும், கோடிகளில் புரளுபவர்களாகவும் இருப்பதில் ஆச்சர்யம் எதுவும் இல்லை.

எனவே தென்மேற்கு மூலைக்கு பலத்தை கொடுத்து வடமேற்கை வசப்படுத்தி தொழிலை செய்கின்ற போது சுகமான சுமையாக வாழ்க்கை மலர்வதை உணர முடியும். உணர்ந்து வாழுங்கள்!!!!

வாழ்க வளமுடன்!!! வளர்க பணமுடன்!!! அன்புடன்… அழகர் ஶ்ரீ வித்யா

பூஜை அறையில் இருக்க வேண்டியவை

சமையலறையில் எவ்வளவோ மளிகை சாமான்கள் இருந்தாலும் அவற்றுள் “அஞ்சறைப்பெட்டி”யின் பங்கே தனிதான்.

மிக மிக அத்தியாவசியமான பொருட்கள் இந்த அஞ்சறைப்பெட்டியில் இருப்பது, அப்பொருட்கள் தினமும் அவசியமாய் சமையலுக்கு தேவைப்படும் என்பதாலும் கையாளுவதற்கு எளிதாய் இருப்பதாலும் தான் ஒரே பெட்டியில் அவை உள்ளன.

இதேபோல் தெய்வங்கள் நிறைய இருந்தாலும் நம் மனதிற்கு நம்பிக்கையையும், புத்துணர்வையும் அளிப்பதில் சில தெய்வங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் புத்துணர்விற்கும், தன்னம்பிக்கைக்கு ஆண்டாளும், உற்சாகத்திற்கு திருப்பதி ஏழுமலையானும், வெற்றிக்கு திருச்செந்தூர் மற்றும் பழனி முருகனும் இன்றியமையாத இடம் பெறுகின்றனர்.

செல்வத்திற்கு மகாலட்சுமியும், அன்னத்திற்கு அன்னபூரணியும் துணை புரிகின்றனர்.

அழகிய காமாட்சி விளக்கு சிவனின் அக்னித்துவத்தையும், வள்ளளாரின் கொள்கையையும் ஒருங்கே கொண்டாடுகிறது.

24 மணி நேரமும் இவ்விளக்கு ஒளிர்ந்து கொண்டு இருப்பது சிறப்பான பலனை கொடுக்கும்.

சாளகிராம வழிபாடு செய்பவர்கள் தினமும் அபிசேகமும், நைவேத்தியமும் வைக்க வேண்டும்.

கோமதிசக்கரமும், தாமரைமணியும் செல்வத்தை ஈர்த்து கொடுப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன.

கிழக்கு முகமாக சாமி படங்களை வைப்பது சிறப்பு. இறந்தவர்களின் போட்டோக்களையும் பூஜை அறையில் வைத்து வணங்குவது புண்ணியத்தை சேர்க்கக் கூடிய விசயமாகும். நீராடி, எளிய  பூஜை முடித்து சமையல் செய்வது மிக நல்ல விளைவுகளை ஏற்படுத்தும்.

கோமதிசக்கரம்  இலவசமாக வழங்கப்படும். தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளுங்கள்.

வாழ்க மகிழ்ச்சியுடன்….
வளர்க பணத்துடன்…..
அன்புடன்
அழகர் ஶ்ரீ வித்யா
88 38 22 1902

தெய்வ அருள் வீட்டில் தங்கும் பூஜை அறையின் அமைவிடம்

          தூணிலும், துரும்பிலும், பஞ்சிலும், பருத்தி நூலிலும் எங்கும் நீக்கமற, காற்றென கலந்திருக்கும் இறைவன் உறைய, ஓர் இடம் தேவையா வீட்டில்?…  

அண்டத்திலும் பிண்டத்திலும் இருப்பது ஒன்றே எனில் ஏன் தனி இடம் ஒதுக்க வேண்டும் இறைக்கு?

     பூஜை, புனஷ்காரம், வேதம், தூபம், தீபம், நைவேத்தியம் இவை இல்லாமல் இருக்க மாட்டாரா அந்த இறை??…

         இப்படி ஆயிரம் கேள்விகளுக்கான பதில்…..

         அழகான, அதி அற்புதமான இந்த மனித உடம்பையே உதாரணமாக கொள்வோம். வாய், வயிற்றிலும்….. மூக்கு, முதுகிலும்…… இருந்தால் என்ன ஆகும் என்பதை சிந்தித்து பார்த்தாலே நகைச்சுவையாக இருக்கும்.

          இருக்கும் இடத்தில் இருந்தால் தான் எல்லாவற்றிற்கும், எல்லோருக்கும் மதிப்பும், மரியாதையும். இடம் மாறினால் தடம் மாறிவிடும்.

           அத்தகைய வகையில், அக்னி இருக்கும் தென்கிழக்கு மூலையில் ஒளிப்பிளம்பான இறைக்கான இருப்பிடத்தை கொடுக்கும் போது, வீடும் சுபிட்சமாக இருக்கும். தெய்வ கடாட்சமும் நிரம்பி இருக்கும்.

             “சூடு” இருந்தால் தான் உயிர்கள் அனைத்தும் உயிர் வாழ முடியும். இதேபோல் “சுபிட்சம்” இருந்தால் தான் வீடே உயிர் வாழ முடியும்.

               சுபிட்சமான பூஜை அறையை எப்படி அமைக்க வேண்டும் என்பதை பற்றி அடுத்து வரும் பதிவில் காண்போம்.

               வாழ்க மகிழ்ச்சியுடன்…. வளர்க பணமுடன்…. அன்புடன்… அழகர் ஶ்ரீ வித்யா